ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது என்பது வழக்கம் தான். ஆனால் ஒரு நபருக்கு ஒரே நாளில் இரண்டு முறை அதே காரணத்திற்காக அபராதம் விதிக்க 2016 ஆம் ஆண்டு வாகன திருத்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் ஹெல்மெட் உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டால் அதே காரணத்துக்காக அதே நாளில் அபராதம் விதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.