கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஃபேன் சுவிட்ச்சை அழுத்தும் பொழுது தாத்தா சீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் (15) மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த திருக்குமரனின் தாயார் ரேவதி இருவரையும் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் மொத்த மின் இணைப்பையும் துண்டித்த பிறகு ரேவதி மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.