சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் ஆளுநர் தமிழிசை இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி நலம் விசாரித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி தமிழிசை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
தமிழிசை – அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவிய நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.