அசாமில் கடந்த மாதம் முதல் கன மழை பெய்கிறது. இதனால் அங்கு உள்ள முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்து உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த 14.39 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.57 லட்சம் பேர் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்துக்கு மேலும் 5 பேர் உயிர் இழந்ததால், பலி எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது.