அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக மொத்தம் 29 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் எட்டு பேர் உயிரிழந்ததால் வலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.