அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் ‘விடா முயற்சி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகி திரிஷாவுடன் அஜித் இருப்பது போன்று வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.