வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் நேர்ந்த நிலச்சரிவில் சிக்கிய 700க்கும் மேற்பட்டோர் நிலை என்ன ஆனது? என்பது தெரியவில்லை. தொடர் மழைக்கு மத்தியிலும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.