உலர் கருப்பு திராட்சை செரிமான கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். செரிமானத்தை எளிதாக்குவதோடு, ரத்த சோகை, கொழுப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தினமும் உலர் பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.