பாரீஸ் ஒலிம்பிக்ஸில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ் ஏழு மாத கர்பிணியாவர்.இவர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 16-ஆவது சுற்றில் தோல்விக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “போட்டிக் களத்தில் 2 பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் இங்கிருப்பது 3 பேர். “ஆம்.! நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை” என் குழந்தையும், நானும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உள்ள சவால்களை எதிர் கொண்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.