சிறுநீரகக் கோளாறு காரணமாக, கவலைக்கிடமான நிலையில் இருக்கும் பிரபல தமிழ் காமெடி நடிகர் வெங்கல் ராவ், பண உதவிக்கேட்டு உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கை, கால்கள் செயலிழந்து விட்டதால் என்னால் நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பணம் இல்லாததால், மருந்து கூட வாங்க முடியவில்லை. சினிமா நடிகர்கள், உங்களால் முடிந்த உதவி செய்தால் கூட போதும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.