நடிகர் சூர்யா நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர். இதில் வடசென்னையை சேர்ந்த சூர்யா நற்பணி மன்ற உறுப்பினர்கள், அயனாவரம், முகப்பேர் அரசு மருத்துவமனைகளில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினர். இந்த மோதிரங்களை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் வழங்கினார்.