அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் தளமும், 2ஆவது தளமும் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதாகவும், கோயில் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.75 கோடிக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது