டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாண்டியாவின் ஃபார்ம் பற்றிய கேள்விகள் எழுந்தபோது, நாங்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தோம் எனவும் அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுக்குழு தான் கேப்டனை தேர்வு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2024 டி20 உலக கோப்பையை டீம் இந்தியா வென்றதை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். ரோஹித் சர்மா விலகிய நிலையில் அடுத்த இந்திய டி20 கேப்டனாக யாரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.