தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதிய ரேஷன் கார்டு கோரி 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருப்பில் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த மாதம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.