தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.