மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமானது மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.