தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 1,768 காலிப் பணியிடங்களுக்கு வரும் 21 ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 1,000 காலிப் பணியிடங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டாய தமிழ் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறையில் இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறும்.