சென்னை அண்ணாநகர் டவர் பார்க் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “50 பூங்காக்களில் ஸ்பான்ஸ் பார்க் ரூ.15 கோடியில் அமைக்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடி செலவில் கட்டப்படும். சென்னை மாநகராட்சியில் 7 புதிய எரிவாயு தகன மேடைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.