தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது பல்வேறு கேள்விகளுக்கும் சரளமாக பதிலளிப்பார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில், இனி பேட்டி கொடுப்பதாக இருந்தால் கட்சி அலுவலகத்தில் மட்டுமே கொடுப்பேன் என கூறியுள்ளார். பாஜக மேலிடம் விதித்த கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.