தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு பவர் இல்லை என்று கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து யார் நிர்பந்தத்தால் நீக்கப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு, தமிழிசை, எல். முருகன், கேசவ விநாயகம், கருப்பு முருகானந்தம் மற்றும் ராம சீனிவாசன் ஆகியோரே தன்னை நீக்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும் கட்சியில் மூத்த தலைவர்களின் கைகளே ஓங்கி உள்ளது என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.