அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை, திமுக ஆட்சியில்தான் விற்கப்படுகிறது என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய விற்பனைக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய அவர், படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அண்ணாமலை, தலைவர்களை பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை கற்றுக்கொண்டு வர வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார்.