ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அண்ணாமலை சிபிஐ விசாரணை கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களில் அண்ணாமலையின் ஆட்களும் இருப்பதால் விசாரணையை தாமதப்படுத்தவே சிபிஐ விசாரணை கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, கள்ளக்குறிச்சி உயிரிழப்பை கட்டாயம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை கூறியிருந்தார்.