அண்ணாமலை நீக்கப்பட்டாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேராது என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இல்லாத பட்சத்தில் அதிமுக கூட்டணி சேருமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பாஜக தலைமையின் ஆசி இல்லாமல் அதிமுகவை அண்ணாமலை விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் பாஜகவுடன் அதிமுக ஒரு போதும் கூட்டணி சேராது என தெரிவித்துள்ளார்.