அண்ணாமலை குறித்து தேவையில்லாமல் கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடித்து கொண்டுள்ளார். பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உட்பட யார் வந்தாலும் மீண்டும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக கூறியுள்ளது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எல். முருகன், மாநிலத் தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாகவும் உட்கட்சி விவகாரத்தில் மற்றொரு கட்சி தலையிட முடியாது என்றும் கூறியுள்ளார்.