தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்தது உள்ளிட்ட விவகாரங்களால் திருச்சி சூர்யா உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சூர்யா அளித்துள்ள பேட்டியில், அண்ணாமலை நாடகம் போடுவதாகவும், தனது கண் எதிரிலேயே திமுக அமைச்சர்களுடன் அண்ணாமலை பலமுறை பேசியதாகவும் சாடியுள்ளார். அண்ணாமலை நாடகம் குறித்து மக்களிடம் தெரிவித்து அவரது முகத்திரையை கிழிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.