திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது இளைஞர் தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை வருவாய் துறையினர் அகற்ற முயன்ற போது இளைஞர் ஒருவர் அதிகாரிகள் முன் தீக்குளித்தார். இளைஞர் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், காவலர்கள் அந்த இளைஞனை மீட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.