தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவில் கிக் இல்லை, அதனால் தான் சிலர் அதிக கிக் கிடைக்க கள்ளச்சாராயம் அருந்துகின்றனர், உழைப்பவர்களின் அசதியை போக்க மது தேவைப்படுகிறது என்று பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மது ஆலைகள் நடத்துகின்றனர். இப்படி மக்களை சீரழிக்கும் மதுவை பெரிதாக அவர் பேசலாமா என்று தெரிவித்துள்ளனர்.