டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அன்ரிச் நோர்ட்ஜே (13 விக்கெட்) படைத்துள்ளார். ஆஃப்கன் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 2 விக்கெட்டை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் இம்ரான் தாஹிர் (12 விக்கெட்), காகிசோ ரபாடா (12 விக்கெட்), சி லாங்கேவெல்ட் (11 விக்கெட்), தப்ரைஸ் ஷம்சி (11 விக்கெட்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.