விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் திமுக வேட்பாளருக்கே வாக்களித்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று இபிஎஸ் கூறியிருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் செல்வாக்கு நீடிக்கிறது என்றும் எதிர்க்கட்சியினரின் எதிர்மறையான விமர்சனங்கள் எடுபடவில்லை என்றும் அவர் பேட்டியளித்திருக்கிறார்.