அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், திமுகவை வீழ்த்துவதற்காக விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். துரோகிகளை நீக்கிவிட்டு, அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்