சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் தவறான நிலைப்பாடு வருத்தமளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமான கேள்விக்கு பதிலளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், பதிலை கேட்க அவர்கள் தயாராக இல்லை என்றும் குற்றம்சாட்டினார். ஒருபுறம் தேர்தலில் தோல்வி, மறுபுறம் சொந்தக் கட்சியினரின் நெருக்கடி ஆகியவற்றால் அக்கட்சி தவித்து வருவதாகவும் அவர் பரிதாபம் தெரிவித்தார்.