திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியங்களில் 2017-18ஆம் ஆண்டிலும், தொள்ளார் ஒன்றியத்தில் 2019-20 ஆண்டிலும் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அப்போதைய அதிமுக ஆட்சியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.