திமுக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக கூட்டணிக்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வர வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், மாஞ்சோலை விவகாரத்திலும் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக கூறிய அவர், வேங்கைவயல், நாங்குநேரி விவகாரங்களில் திருமாவளவன் அரசை குற்றம்சாட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.