திமுகவின் அநீதிகளுக்கு அதன் கூட்டணி கட்சிகள் துணை போவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பதிலளித்துள்ளார். அதில் அவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகதான் வலிமையையும், கொள்கையையும் இழந்து விட்டதாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாமல் டிராமா செய்து வெளியேறியது இபிஎஸ்தான் எனவும் அவர் சாடியுள்ளார்.