விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதால், அக்கட்சியினரின் வாக்குகளை பெற திமுக, பாமக, நாதக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாமகவின் பேனர்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றதோடு, அன்புமணி நேரடியாகவே அதிமுகவினரின் ஆதரவை கோரியுள்ளார். இதே போல, அமைச்சர் எ.வ.வேலு, சீமான் ஆகியோரும் ஆதரவை கேட்டுள்ளனர். ஆனால், அதிமுகவினரின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.