அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா இன்று தொடங்குகின்றார். அக்கட்சியை ஒன்றிணைக்க பயணம் தொடங்கப் போவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் பயணத்தை தொடங்கும் சசிகலா நான்கு நாட்கள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வாரியாக பயணம் செய்கின்றார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில் அவரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.