அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,அதிமுக தொண்டர்கள் கவனமாக விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. சசிகலா இருந்தால்தான் அதிமுக வெற்றிபெறும் என்பது கற்பனை கதை. தான் சார்ந்த சமுதாயத்திற்கு சசிகலா என்ன செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.