கடலூர் வண்டி பாளையத்தில் அதிமுக மாவட்ட பிரதிநிதி புஷ்பநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பைக்கில் சென்றவரை வழிமறித்து ஓட ஓட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளது. இந்த படுகொலைக்கு முன் விரோதம் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.