புதுச்சேரி எல்லைப் பகுதியான திருப்பானம்பாக்கத்தில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் (43) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்த இவர் கோவில் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த பயங்கரம் நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த அவரை காரை மோத விட்டு கீழே தள்ளி வெட்டி கொன்றுவிட்டு மர்மகும்பல் தப்பி ஓடி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.