சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐகோர்ட் வழக்கறிஞர் செந்தில்நாதன், எழும்பூர் வழக்கறிஞர் விஜயகுமார் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்கள், நாற்காலிகள், கற்கள் ஆகியவற்றின் மூலம் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.