கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.