பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வரும் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி இன்று உடல்நலக் குறைவினால் திடீரென காலமானார். கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி வீடு திரும்பிய நிலையில் இன்று காலை தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.அவருக்கு வயது தற்போது 70. வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி சரவணன் மீனாட்சி மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை விஜயலட்சுமி மரணத்திற்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.