அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
சர்க்கரை சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் சத்துக்கள் நான்கு மடங்கு அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தவிர்த்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
அத்திப்பழம் பயன்கள்
இரத்த அழுத்தம் குறைய:-
உணவில் உப்பு அதிகம் சேர்த்து கொள்ளும் போது, உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த இரத்த அழுத்த பிரச்சனையை குணப்படுத்த அத்திப்பழம் மிக சிறந்த மருந்து என்று சொல்லலாம். ஒரு அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மில்லிகிராம் சோடியம் உள்ளது. ஆகவே இந்த பிரச்சனையை தவிர்க்க தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதினால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கலாம்.
மலச்சிக்கல் குணமாக
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவருந்திய பிறகு சிறிதளவு அத்தி விதைகளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். அதேபோல் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு தினமும் இரவு உறங்குவதற்கு முன் 5 அத்திப்பழத்தை சாப்பிட்டு வர கூடிய விரைவில் பிரச்சனை குணமாகும்.
ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம்
அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வருவதினால் உடலில் அளவற்ற ஆரோக்கியத்தை பெறலாம். அதே போல் அத்திப்பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என்று இரு வேளை சாப்பிட்டு ஒரு கிளாஸ் பால் அருந்தி வர உடலில் தாது விருத்தியாகும், ஆண்மலடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.
வாய் புண் குணமாக
வாய் புண் பிரச்சனை குணமாக அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து வாய் புண் உள்ள இடத்தில் அப்ளை செய்து வர வாய்புண் குணமாகும்.
இரத்த சோகை குணமாக அத்திப்பழம்
உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்பு சத்து அவசியம் தேவை என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த இரும்பு சத்து அத்திப்பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. அதாவது உடலுக்கு அன்றாட தேவைப்படும் இரும்பு சத்து அத்திப்பழத்தில் 2 சதவீதம் உள்ளது. எனவே தங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் உலர்ந்த அத்திப்பழத்தை ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வரலாம். இதனால் இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.
வெண்குஷ்டம் குணமாக
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டம் நோயை குணப்படுத்த பயன்படுகிறது. எனவே அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் குணமாகும். மேலும் இதனைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து, வெண் புள்ளிகள் மீது பூசி வர வெண்குஷ்டம் நோய் குணமாகும்.