ஆயுஷ்மான் குர்ரானா, தபூ, ராதிகா ஆப்தே நடிப்பில் ஹிந்தியில் 2018ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘அந்தாதூன்’. இப்படம் தமிழில் பிரஷாந்த், சிம்ரன் நடிக்க ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பல முறை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.