இயக்குநர்களின் ஆசிர்வாதத்தால்தான் திரைத்துறையில் தனக்கு வளர்ச்சியும் புகழும் கிடைத்ததாக நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஐதராபாத்தில் பேசிய அவர், சரியான சமயத்தில் சரியான வாய்ப்புகள் வந்ததால்தான் தான் இந்த நிலையில் இருப்பதாகக் கூறினார். தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், ஜூனியர் என்.டிஆருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.