மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவியுள்ளார். கணவர் மறைந்த பிறகு குழந்தைகளுடன் கஷ்டப்படுவதாக அவரது மனைவி பவானி பேட்டி அளித்திருந்தார். இதை கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், 2 மகள்களின் கல்வி கட்டணமாக சுமார் ₹1 லட்சம் செலுத்தி உதவிக்கரம் நீட்டியுள்ளார். தன் கணவருக்கும். அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதபோதும் அவர் உதவியதாக பவானி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.