2024 டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஆஃப்கன் அணி அபார வெற்றி பெற்றது. கிங்டவுனில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 148/6 ரன்கள் எடுத்தது. பின்னர் 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஃப்கனின் வெற்றியை ‘அப்செட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி கொச்சைப்படுத்த வேண்டாம் என முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் தெரிவித்துள்ளார். ஆஃப்கன் அணி சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள எந்த அணியையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியை யாருமே எதிர்பாராத ஒரு சிறிய அணி வீழ்த்தினால் அதனை ‘அப்செட்’ என்று அழைப்பர்.