சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்தால்தான் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியும் என சீனியர்கள் சிலர் இபிஎஸுக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது. இதற்கு உடன்படாத அவர், தென் மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை செய்து சீனியர்களின் அதிகாரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளராம். இதனால், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் இபிஎஸுக்கு அதீத விசுவாசம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.