2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பின் டி20 சாம்பியன் பட்டத்தை டீம் இந்தியா வென்றது. அதே நேரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் ட்ராவிட்டின் பதவிக்காலமும் அதோடு முடிவடைகிறது. இதையடுத்து கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி குறித்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம், கவுதம் கம்பீர் பயிற்சியாளராவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “கம்பீருக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவர் பல அணிகளுடன், விளையாடியிருக்கிறார். பல விதமான போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனாலும் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை” என்று கூறியுள்ளார்.