இந்தியன் 2 திரைப்படம் நல்ல கதைக்களத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை கண்டுகளித்த பின் பேசிய சீமான், அவரவர் வீட்டை சுத்தம் செய்யுங்கள், நாடு சுத்தமாகும் என்பதே படத்தின் கோட்பாடு என்றார். உன் வீட்டை நீயே சுத்தம் செய், அனைத்திற்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார் என்பதே என்னுடைய கோட்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.